கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

20 சிறந்த ஆசிரியர்களுக்கு விருது

கும்பகோணத்தில் கார்த்திக் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கார்த்திக் வித்யாலயா இன்டர்நேஷனல் பள்ளி, பன்னாட்டு அரிமா சங்கங்கள்

Updated On :3 செப்டம்பர் 2018, 3:22 am

கும்பகோணத்தில் கார்த்திக் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கார்த்திக் வித்யாலயா இன்டர்நேஷனல் பள்ளி, பன்னாட்டு அரிமா சங்கங்கள், குடந்தை திருக்குறள் அரிமா சங்கம், செல்லம்மாள் அறக்கட்டளை, அழகர் அறக்கட்டளை, இந்திய தன்னார்வ சங்கம் ஆகியவை சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் 20 சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
இந்த விருதுகளை கார்த்திக் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிறுவனர் மற்றும் தாளாளர் கார்த்திகேயன் வழங்கினார். மேலும், இவர்களுக்குத் தென்னங்கன்றுகளும், நூறு ஆசிரியர்களுக்குச் சிறப்பு விருதுகளும், தேக்கு, கொய்யா, வேங்கை நாட்டு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
விழாவில் கார்த்திக் வித்யாலயா இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன், அரிமா சங்க நிறுவனத் தலைவர் கிட்டப்பா முருகேசன், இயக்குநர் மருதையன்,  செயலர்கள் ராம. முத்துராமன்,  சிவக்குமார், உறுப்பினர் வளர்ச்சி தலைவர் கோவி. அம்பிகா நீலமேகம், கும்பகோணம் சீனி. நலங்கிள்ளி, கார்த்திக் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் அம்பிகாபதி, கார்த்திக் வித்யாலயா இன்டர்நேஷனல் பள்ளி ஆலோசகர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.