மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

தஞ்சாவூர் வழித்தட ரயில்களின் சேவையில் மாற்றம்

பொறியியல் பணி காரணமாக தஞ்சாவூர் வழித்தடத்தில் இயக்கப்படும் சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

பொறியியல் பணி காரணமாக தஞ்சாவூர் வழித்தடத்தில் இயக்கப்படும் சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி - தஞ்சாவூர் - திருச்சி பயணிகள் ரயில் இயக்கம் (76824 / 76827) செப். 8, 15,  22,  29-ம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயில் (56824) சேவையில் கும்பகோணம் - மயிலாடுதுறை இடையே செப். 8-ஆம் தேதி முதல் 12-ம் தேதி வரையும், திருநெல்வேலி - மயிலாடுதுறை - திருநெல்வேலி பயணிகள் ரயில் (56822 / 56821)  சேவையில் திருச்சி - தஞ்சாவூர்  இடையே செப். 6-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 
திருச்சி - மயிலாடுதுறை விரைவு ரயில் (16234) செப். 6-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மயிலாடுதுறைக்கு ஒரு மணிநேரம் தாமதமாகச் செல்லும். 
மயிலாடுதுறை - கோவை ஜன சதாப்தி விரைவு ரயில், சென்னை - திருச்சி சோழன் விரைவு ரயில், புவனேசுவரம் - ராமேசுவரம் வாராந்திர விரைவு ரயில், காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில் (56711) ஆகியவை செப். 6-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை தஞ்சாவூர் - ஆலக்குடி இடையே 20 நிமிடங்கள் நிறுத்தப்படும்.
திருச்சி - நாகூர் பயணிகள் ரயில் (76854) செப். 8-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை திருவாரூரில் 10 முதல் 15 நிமிடங்கள் நிறுத்தப்படும். காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில் (56711) சேவையில் செப். 18-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை காரைக்காலில் பிற்பகல் 12.40 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 50 நிமிடங்கள் தாமதமாக 1.30 மணிக்கு புறப்படும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.