
சென்னையில் மதிமுக சார்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு விழா தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்றது.
சென்னையில் மதிமுக சார்பில் மாநில அளவிலான பெரியார் - அண்ணா பேச்சுப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி மாணவி தி. அட்சயா முதல் பரிசையும், கும்பகோணம் அன்னை கலை, அறிவியல் கல்லூரி மாணவர் ஆ. நாகமுத்துப்பாண்டியன் இரண்டாம் பரிசும் பெற்றனர்.
இவர்களுக்கான பாராட்டு விழா தஞ்சாவூரில் மதிமுக சார்பில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்டச் செயலர் கோ. உதயகுமார் தலைமை வகித்தார். பரிசுப் பெற்ற அட்சயா, நாகமுத்துப்பாண்டியனுக்கு மதிமுக சட்டத் துறை மாநிலச் செயலர் வீரபாண்டியன் பொன்னாடை அணிவித்து புத்தகங்கள் வழங்கிப் பாராட்டினார்.
இவ்விழாவில் மாநகர செயலர் வி. தமிழ்ச்செல்வன், ஒன்றியச் செயலர்கள் பாஸ்கர், மாணிக்கவாசகம், மாணவரணி மாநிலத் துணைச் செயலர் சத்யகுமார், மாவட்டத் துணை அமைப்பாளர்கள் ரவிச்சந்திரன், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





