கண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பாபநாசம் கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு குறித்து ஆய்வு

பாபநாசத்தில் பேரூராட்சியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டில்

Updated On :23 ஜனவரி 2019, 7:57 am IST

பாபநாசத்தில் பேரூராட்சியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டில் உள்ளதா என்பது குறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
பாபநாசம் பேரூராட்சியில் உள்ள மளிகை கடைகள், பழங்கள்-காய்கறி கடை, இறைச்சி கடை, பொது அங்காடிகள் உள்ளிட்ட கடைகள்,  வர்த்தக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டில் உள்ளதா என ஆய்வு நடத்தப்பட்டது. 
இதில்,  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்திய கடைகள், நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, கடைகளில் பயன்பாட்டிலிருந்த  பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அபராதமாக 11,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது. 
பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழியன், துப்புரவு ஆய்வாளர் செந்தில் குமரகுரு மற்றும் பேரூராட்சி  மன்ற அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.