விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தஞ்சாவூர்: வங்கியில் தீ விபத்து

தஞ்சாவூரில் உள்ள வங்கியில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

News image

தஞ்சாவூரில் தீவிபத்து ஏற்பட்ட வங்கி.

Updated On :16 ஆகஸ்ட் 2020, 4:07 pm

தஞ்சாவூரில் உள்ள வங்கியில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தஞ்சாவூர் காந்திஜி சாலையில் எல்.ஐ.சி. கோட்ட அலுவலகம் உள்ளது. இந்த வளாகத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கிளை செயல்பட்டு வருகிறது. இதில், முன் பகுதியில் ஏடிஎம் மையம் உள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், வங்கி இரு நாள்களாகப் பூட்டிக் கிடக்கிறது. இந்நிலையில், இந்த வங்கியில் ஞாயிற்றுக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. 

Story image

தகவலறிந்த தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் நிகழ்விடத்துக்குச் சென்றனர். ஆனால், வங்கிப் பூட்டப்பட்டுக் கிடந்ததால், பக்கவாட்டு ஜன்னலை உடைத்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால், இடையில் கண்ணாடி இருந்ததால், முழுமையாக அணைக்க முடியவில்லை. இதையடுத்து, முன்புறக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். 

அப்போது, ஏ.சி., கணினி, பணம் எண்ணும் இயந்திரம், மின் விசிறி, மரத் தடுப்பு ஆகியவை தீப்பற்றி எரிவது தெரிய வந்தது. இதை தீயணைப்பு வீரர்கள் அணைத்து மேலும் தீ பரவாமல் தடுத்ததால், பெரு விபத்து தவிர்க்கப்பட்டது. வங்கியிலுள்ள ஏ.சி.யில் மின் கசிவு ஏற்பட்டு, அதன் மூலம் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

Story image

இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.