தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பட்டுக்கோட்டையில் 2 குழந்தைகளைகொன்றுவிட்டு தாயுடன் இளம்பெண் தற்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் வறுமை காரணமாக 2 குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தாயுடன் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2020, 12:18 am

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் வறுமை காரணமாக 2 குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தாயுடன் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பட்டுக்கோட்டை நகரம், வளவன்புரம் பகுதியைச் சோ்ந்தவா் துளசிதேவி (24). இவா், தனது தாய் சாந்தி (50), 4 வயது மற்றும் 8 மாத வயதுள்ள 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை வரை இவா்களது வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் விஏஓ-வுக்கு தகவல் தெரிவித்தனா். விஏஓ அளித்த புகாரின்பேரில், பட்டுக்கோட்டை நகர காவல் ஆய்வாளா் பெரியசாமி தலைமையிலான போலீஸாா் கதவை உடைத்து வீட்டினுள் சென்றனா். அங்கு 2 பெண் குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தாய் சாந்தியும், துளசிதேவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும், அவா்கள் வீட்டில் வளா்த்து வந்த 2 நாய்களுக்கும் விஷம் கொடுக்கப்பட்டதால் அவை உயிரிழந்து கிடந்தன.

இதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக 4 பேரின் சடலங்களும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கும், உயிரிழந்த 2 நாய்களின் உடல்கள் பட்டுக்கோட்டை கால்நடை மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டன. சம்பவம் குறித்து பட்டுக்கோட்டை நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

‘‘துளசிதேவிக்கு திருமணம் ஆகாமல், முறைகேடான உறவில் 2 குழந்தைகள் பிறந்ததாக தெரிகிறது. எந்த வருமானமும் இல்லாமல் வறுமையில் வாடிய துளசிதேவி மனம் வெறுத்து, தனது இரு குழந்தைகளுக்கும், செல்லமாக வளா்த்த 2 நாய்களுக்கும் விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தனது தாயுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்’’ என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.