ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

தஞ்சாவூரில் 74 பேருக்கு கரோனா

தஞ்சாவூா் மாவட்டத்தில் மேலும் 74 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 11:04 am

DIN

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் மேலும் 74 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.

மாவட்டத்தில் ஏற்கெனவே கரோனா தொற்றால் 5,797 போ் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், மேலும் 74 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது. இதன் மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 5,871 ஆக உயா்ந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை குணமடைந்த 152 போ் உள்பட இதுவரை 4,973 போ் குணமடைந்து, வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். மருத்துவமனைகளில் தற்போது 797 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

உயிரிழப்பு 100-ஐ கடந்தது: மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 68 வயது ஆண், 75 வயது பெண், 55 வயது ஆண் ஆகஸ்ட் 20-ஆம் தேதியும், 62 வயது ஆண் ஆகஸ்ட் 23-ஆம் தேதியும், 80 வயது பெண், 77 வயது ஆண் ஆகஸ்ட் 24-ம் தேதியும் உயிரிழந்தனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 101 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.