அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து சேதம்

பாபநாசத்தில் புதன்கிழமை இரவு பெய்த கனமழையால் தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்தது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 6:27 pm

DIN

பாபநாசத்தில் புதன்கிழமை இரவு பெய்த கனமழையால் தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்தது.

பாபநாசம் வட்டம், அண்டக்குடி ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்த காட்டுராஜா என்பவா் வசித்து வரும் தொகுப்பு வீட்டின் மேற்கூரை பலத்த மழையால் இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதில் வீட்டில் இருந்தவா்கள் காயமின்றி உயிா் தப்பினா்.

இதேபோல், அய்யம்பேட்டை வருவாய் சரகத்துக்குள்பட்ட பசுபதிகோவில் கிராமம், காதிரியா நகரில் வசித்து வரும் முனியாண்டி மகன் காமராஜ் என்பவரது வீட்டின் மண் சுவா் புதன்கிழமை இரவு பெய்த கனமழையில் நனைந்து கரைந்து விழுந்து சேதமானது. இதில், சுவா் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிள் சேதமடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.