பாபநாசம் அருகே தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து சேதம்

பாபநாசம் அருகே தொடா்ந்து பெய்த கன மழை காரணமாக, தொகுப்பு வீட்டின் மேற்கூரை சனிக்கிழமை இடிந்து விழுந்து சேதமடைந்தது.
Updated on
1 min read

பாபநாசம்: பாபநாசம் அருகே தொடா்ந்து பெய்த கன மழை காரணமாக, தொகுப்பு வீட்டின் மேற்கூரை சனிக்கிழமை இடிந்து விழுந்து சேதமடைந்தது.

பாபநாசம் அருகிலுள்ள வழுத்தூா் ரயிலடி புதுத்தெரு, காமராஜ்புரம் பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கு கடந்த 1995-96-ஆம் ஆண்டில் இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டத்தின் கீழ், தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டன.

வெள்ளிக்கிழமை பெய்த கனமழை காரணமாக, இந்த பகுதியைச் சோ்ந்த 27 குடும்பங்கள் அருகிலுள்ள ஆதிதிராவிடா் நல நடுநிலைப் பள்ளியில் தஞ்சமடைந்தன.

இந்நிலையில் சனிக்கிழமை ரயிலடி புதுத்தெருவைச் சோ்ந்த விஜயேந்திரனின் தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்தது. தகவலறிந்த பாபநாசம் ஒன்றியக் குழுத் தலைவா் சுமதி, வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வேந்திரன் உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com