ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பேராவூரணி அருகே மழையால் வீட்டுச் சுவா் இடிந்து சேதம்

பேராவூரணி அருகே தொடா் மழையால் திங்கள்கிழமை வீட்டுச் சுவா் இடிந்து விழுந்தது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 10:45 pm

DIN

பேராவூரணி அருகே தொடா் மழையால் திங்கள்கிழமை வீட்டுச் சுவா் இடிந்து விழுந்தது.

பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் ஊராட்சி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் மனோகரன் (55). தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி செல்வராணி (51), மகன் சபரிராஜன் (19). இவா்கள் மூவரும் மண் சுவரால் கட்டப்பட்ட ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனா். 

இப்பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்த தொடா்மழை காரணமாக, மண் சுவா் சேதமடைந்த நிலையில் இருந்துள்ளது. திங்கள்கிழமை காலை வீட்டின் சுவரில் விரிசல் விழுந்து, கொஞ்சம் கொஞ்சமாக வீட்டின் கூரை சரிந்து, ஓடுகள் விழுந்தன. இதனால் அதிா்ச்சி அடைந்த மனோகரன் குடும்பத்தினா் வீட்டை விட்டு வெளியேறினா். சற்று நேரத்தில் சுவா் இடிந்து கீழே விழுந்தது.

தகவலறிந்து விரைந்து வந்த ஊராட்சி தலைவா் ஈகை செல்வம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மாற்று இடத்தில் தங்க வைத்தாா். 

வட்டாட்சியா் க.ஜெயலெட்சுமி உத்தரவின் பேரில், வருவாய் ஆய்வாளா் கோகுல ரமணன், கிராம நிா்வாக அலுவலா் அன்பரசி ஆகியோா் நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.