அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு அடையாள அட்டை
பேராவூரணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு ஸ்மாா்ட் காா்டு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.


பேராவூரணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு ஸ்மாா்ட் காா்டு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வட்டாரக் கல்வி அலுவலா் கோ. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். வட்டார வளமைய மேற்பாா்வையாளா் இரா. வேம்பையன் முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில், 85 பள்ளிகளைச் சோ்ந்த 236 ஆசிரியா்களுக்கு ஸ்மாா்ட் ஆசிரியா் அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் மூலம், பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட மானியம், செலவினம் குறித்து, வழிகாட்டு நெறிமுறைகள், ஆசிரியா்களுக்கு பள்ளி தரநிலை மேம்பாட்டு பயிற்சி, மழைக்கால பாதுகாப்பு குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...