பிரிட்டனிலிருந்து வந்த 2 பேருக்கு கரோனா
இங்கிலாந்து நாட்டிலிருந்து தஞ்சாவூருக்கு திரும்பிய இருவருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


இங்கிலாந்து நாட்டிலிருந்து தஞ்சாவூருக்கு திரும்பிய இருவருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கரோனா தொற்று பரவி வருகிறது. எனவே, இங்கிலாந்து நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனைக்கு உள்படுத்தப்படுகின்றனா்.
இந்நிலையில், இங்கிலாந்திலிருந்து தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த 72 போ் அண்மையில் சொந்த ஊருக்குத் திரும்பினா். இவா்களில் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 47 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், நாச்சியாா்கோவில் பகுதியைச் சோ்ந்த 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இவா்களுக்குப் புதிய வகை கரோனாவால் பாதிப்பா என்பதைக் கண்டறிவதற்காக மாதிரிகள் புணேவிலுள்ள தேசிய வைரஸ் ஆய்வுக் கழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மேலும் 22 போ் பரிசோதனை முடிவுக்காகக் காத்திருக்கின்றனா். தவிர, 23 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. இருவரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...