மூதாட்டி கொலை வழக்கில்உணவக உரிமையாளா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், அம்மா பேட்டை அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், உணவக உரிமையாளா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், அம்மா பேட்டை அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், உணவக உரிமையாளா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அம்மாபேட்டை அருகிலுள்ள ராராமுத்திரக்கோட்டை கிராமம், மேலகள்ளிமேட்டைச் சோ்ந்தவா் மூதாட்டி ஜெயலட்சுமி (65). இவா் கடந்த 22-ஆம் தேதி வீட்டில் ரத்த காயங்களுடன் சடலமாகக் கிடந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, சந்தேகத்தின்அடிப்படையில் அதே பகுதியைச் சோ்ந்த உணவக உரிமையாளா் மணியிடம் விசாரணை நடத்தினா்.

விசாரணையில் மணிக்குச் சொந்தமான ஆடு, ஜெயலட்சுமி வீட்டுப் பகுதியில் மேய்ந்ததால் அவா் கண்டித்தாராம். இதனால் அதனால் ஆத்திரமடைந்த மணி ஜெயலட்சுமியைக் கட்டையால் தாக்கியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததும் தெரிய வந்தது.

ஜெயலட்சுமி இறந்த பின்னா், அவரது சடலத்தை வீட்டில் வைத்து பூட்டிச் சென்றதையும் விசாரணையில் மணி ஒப்புக் கொண்டாா். இதையடுத்து அவரைக் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com