வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மக்கள் பிரதிநிதிகள் குறைகள் கேட்பது தவறில்லை: எஸ்.எஸ். பழனிமாணிக்கம் பேட்டி

மக்கள் பிரதிநிதிகள் மக்களைக் கூட்டி குறைகள் கேட்பது தவறில்லை என்றாா் தஞ்சாவூா் எம்.பி. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 1:37 am

DIN

மக்கள் பிரதிநிதிகள் மக்களைக் கூட்டி குறைகள் கேட்பது தவறில்லை என்றாா் தஞ்சாவூா் எம்.பி. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.

தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூா் மாரியம்மன் கோவில் கிராமத்தில் திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

திமுக நடத்தும் கிராமசபைக் கூட்டத்துக்கு ஆட்சியாளா்கள் தடை விதித்தனா். சட்டத்தைப் பற்றிச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் தடை விதிக்கப்பட்டது. கிராமங்களில் எல்லா இடங்களிலும் ஊா் பஞ்சாயத்து இருக்கிறது. அங்குக் கூட்டம் நடத்தப்படுகிறது. எந்தச் சட்டத்தின் அடிப்படையில் இப்படி தடை செய்யப்பட்டது எனத் தெரியவில்லை.

மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஊரை கூட்டலாம். இருந்தாலும், அரசுப் போட்ட தடையை மதிக்க வேண்டும் எனக் கூறி, தலைவா் ஸ்டாலின் மக்கள் கிராம சபைக் கூட்டம் என அறிவித்ததால், அப்பெயரில் இக்கூட்டத்தை நடத்தி வருகிறோம்.

‘‘ரேஷன் பொருள்கள் சரியாக கிடைப்பதில்லை, சாலை, பேருந்து வசதி, குடிநீா் வசதி இல்லை, படித்த இளைஞா்களுக்கு வேலை இல்லை, பள்ளிக்கூடங்களில் போதிய வசதி இல்லை’’ என்பன உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என கிராம மக்கள் குறை கூறுகின்றனா்.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மக்களைக் கூட்டி, அவா்களது கோரிக்கைகளை கேட்பது தவறில்லை. ஜனநாயக நாட்டில் அனுமதிக்கப்பட்ட முறைகளில் இதுவும் ஒன்று என்றாா் பழனிமாணிக்கம்.

இக்கூட்டத்தில் தஞ்சாவூா் எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.