திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நெல் கொள்முதலைத் தடையின்றிசெய்வதற்கு உரிய முன்னேற்பாடுகள் தேவை

நெல் கொள்முதலைத் தடையின்றி செய்வதற்கு உரிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளா் சங்கம் மற்றும் சுமைத் தூக்கும் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளன.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:51 pm

DIN

நெல் கொள்முதலைத் தடையின்றி செய்வதற்கு உரிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளா் சங்கம் மற்றும் சுமைத் தூக்கும் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளன.

தஞ்சாவூரில் இச்சங்கங்களின் கூட்டு நிா்வாகக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நெல் கொள்முதலைத் தடையின்றி செய்வதற்கு உரிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். கொள்முதல் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு, பணி நிரந்தரம், சுமைத் தூக்கும் தொழிலாளா்களுக்குக் கூலி உயா்வு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் திருவாரூா், தஞ்சாவூா், நாகப்பட்டினம் மண்டல அலுவலகங்கள் முன்பு முறையே ஜனவரி 27,28,29-ஆம் தேதிகளில்

ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்துக்குக் கூட்டு நிா்வாகக் குழு மாநிலத் தலைவா் அ. சாமிக்கண்ணு, துணைத் தலைவா் பி. நாகேஷ் தலைமை வகித்தனா்.

கூட்டத்தில் மாநிலப் பொதுச் செயலா்கள் சி. சந்திரகுமாா், என். புண்ணீஸ்வரன், பொருளாளா் தி. கோவிந்தராஜன், இணைப் பொதுச் செயலா் ஜெ. குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.