தஞ்சாவூர் சிறையில் கைதிக்கு கரோனா இருப்பது ஞாயிற்றுக்கிழமை இரவு தெரிய வந்தது.
தஞ்சாவூர் நீதிமன்றச் சாலையில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கிளைச் சிறை உள்ளது. தஞ்சாவூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சிறு வழக்குகள் தொடர்பாகக் கைது செய்யப்படுபவர்கள் இச்சிறையில் அடைக்கப்படுவர். இதில் தற்போது 113 கைதிகள் உள்ளனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் நகரைச் சேர்ந்த 42 வயது ஆண் நபரை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினர் மதுபானம் பதுக்கல் தொடர்பான வழக்கில் அண்மையில் கைது செய்து, இச்சிறையில் அடைத்தனர்.

சிறைக்குள் அடைக்கப்படுவதற்கு முன்பு இவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. எனவே இவர் சிறைக்குள் தனியாக அடைக்கப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிடப்பட்ட பரிசோதனை முடிவில் இவருக்கு கரோனா இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து இவர் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


