தஞ்சாவூர் அருகேயுள்ள வாய்க்காலில் 10 ஆண்டுகளாகத் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவையாறு அருகே உள்ள மேலத்திருப்பூந்துருத்தியில் காவிரி வடிநிலக் கோட்டத்துக்கு உள்பட்ட குடமுருட்டி ஆற்றிலிருந்து திருத்துக்கால் வாய்க்கால் பிரிகிறது. இந்த வாய்க்கால், 1,000-க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவுக்கு நேரிடையாகப் பாசன வசதி பெறுவதற்கும், நிலத்தடி நீர்மட்டத்தைச் செறிவூட்டுவதற்கும் பயன்பட்டு வந்தது.
இந்த வாய்க்காலில் 70 சதவீதம் பல வகைகளில் ஆக்கிரமிப்பில் உள்ளது.
இதனால் இந்த வாய்க்காலில் 10 ஆண்டுகளாக நீரோட்டம் தடைபட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வராததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் அப்பகுதி விவசாயிகள் 2011 ஆம் ஆண்டு முதல் மனு அளித்து வருகின்றனர் ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால் விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் பேரூராட்சிப் பகுதியில் உள்ள பி மற்றும் சி பிரிவு வாய்க்கால்களிலும் தூர் வாரப்படவில்லை.
எனவே, திருத்துக்கால் வாய்க்காலில் தண்ணீர் வருவதற்கான நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஊரகப்பகுதிகளில் நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் பி மற்றும் சி பிரிவு வாய்க்கால்களைச் சீரமைப்பது போல், பேரூராட்சிக்குட்பட்ட பகுதியிலும் பி மற்றும் சி பிரிவு வாய்க்கால்களைச் சீரமைக்க வலியுறுத்தியும் கண்டியூர் அருகே உள்ள குடமுருட்டி ஆற்றில் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சங்கத் துணைத் தலைவர் திருப்பூந்துருத்தி பி. சுகுமாரன் தலைமையில் பலர் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


