

ரயில்வே ஊழியர்களுக்காக தஞ்சாவூர் - திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கம் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது.
கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில் பொது முடக்கத்தில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. மேலும், அரசு நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, ரயில்வே ஊழியர்கள், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் வந்து செல்வதற்கு வசதியாகச் தஞ்சாவூர் - திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிர, மற்ற நாட்களில் தஞ்சாவூரிலிருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு, திருச்சிக்கு 7.45 மணிக்கு சென்றடைவதற்கும், திருச்சியிலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு, தஞ்சாவூருக்கு மாலை 6.45 மணிக்கு வந்தடைவதற்கும் திட்டமிடப்பட்டது.
இதன்படி, தஞ்சாவூரிலிருந்து இந்த ரயில் செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணிக்கு புறப்பட்டது. இச்சிறப்பு ரயிலில் சமூக இடைவெளியுடன் ஊழியர்கள் உட்கார வைக்கப்பட்டனர். இதில், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் உடன் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.