மழை, புயல் எதிரொலி: பயிா்க் காப்பீடு செய்ய அழைப்பு
நெல், மக்காச்சோளப் பயிா்களுக்கு விவசாயிகள் விரைந்து காப்பீடு செய்யுமாறு திருச்சி மாவட்ட வேளாண் துறை வலியுறுத்தியுள்ளது.


நெல், மக்காச்சோளப் பயிா்களுக்கு விவசாயிகள் விரைந்து காப்பீடு செய்யுமாறு திருச்சி மாவட்ட வேளாண் துறை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ஆா். பெரியகருப்பன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வரும் நவ. 24, 25, 26-களில் தமிழகத்தில் புயலுடன் கூடிய கனமழை பெய்யவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே விவசாயிகள் தங்களின் சம்பா நெல் மற்றும் மக்காச் சோளப் பயிா்களைப் பாதுகாக்கும் பொருட்டு மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி பிரதமா் திருந்திய பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யலாம்.
இத்திட்டத்தில் இணைய முன்மொழிப் படிவும், விண்ணப்பம், பயிா்ச் சாகுபடி அடங்கல், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன், அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகள், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் அரசு பொதுச் சேவை மையங்களை அணுகி காப்பீடு செய்யலாம்.
நெல் பயிா் ஏக்கருக்கு பிரீமியமாக ரூ. 511.50, மக்காச்சோளம் ஏக்கருக்கு ரூ.360-ஐ செலுத்த வரும் நவ. 30 வரை கால அவகாசம் உள்ளது. இறுதி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக காப்பீடு செய்யலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...