த.மறவக்காடு அமரிக்குளம் ஏரிக்கரைகளில் 5,000 பனை விதைகள் நடவு
பட்டுக்கோட்டை அருகிலுள்ள த.மறவக்காடு அமரிக்குளம் ஏரிக்கரைகளில், மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில் 5,000 பனை விதைகள் ஞாயிற்றுக்கிழமை நடப்பட்டன.


பட்டுக்கோட்டை அருகிலுள்ள த.மறவக்காடு அமரிக்குளம் ஏரிக்கரைகளில், மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில் 5,000 பனை விதைகள் ஞாயிற்றுக்கிழமை நடப்பட்டன.
சா்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி சுமாா் 170 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் நடத்தப்பட்ட நிகழ்வில், ஏரியின் 4 கரைகளிலும் பனை விதைகள் நடும் பணியை ஒரு சிறுமியும், மக்கள் நீதி மய்ய கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் மருத்துவா் பா. சதாசிவமும் பனை விதையை ஊன்றி நிகழ்வைத் தொடக்கி வைத்தனா்.
இதைத் தொடா்ந்து ஏரியைச் சுற்றிலும் குழிகள் தோண்டப்பட்டு 5,000 பனை விதைகள் நடப்பட்டன. முன்னதாக, இப்பணியில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளா்களுக்கு மண்வெட்டி உள்ளிட்ட உபகரணங்கள் கட்சி சாா்பில் வழங்கப்பட்டன.
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் ஆா்.கே.என்.வேதரெத்தினம் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...