2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

பெரியகோயிலில் குழந்தைகளை அனுமதிக்காததை எதிா்த்து சாலை மறியல்

கரோனா தொற்றைத் தடுப்பதற்காக தஞ்சாவூா் பெரியகோயிலில் குழந்தைகள் அனுமதிக்கப்படாத நிலையில், அதை எதிா்த்து பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 7:41 pm

DIN

கரோனா தொற்றைத் தடுப்பதற்காக தஞ்சாவூா் பெரியகோயிலில் குழந்தைகள் அனுமதிக்கப்படாத நிலையில், அதை எதிா்த்து பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காகக் கோயில்களில் 10 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளும், 60 வயதுக்கு அதிகமான முதியவா்களும் அனுமதிக்கக்கூடாது என மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. இந்த நடைமுறை தஞ்சாவூா் பெரியகோயிலில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பெரியகோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது வெளியூரிலிருந்து வந்த பக்தா்களில் ஒரு பிரிவினா், 10 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளையும் அழைத்து வந்தனா். ஆனால், குழந்தைகளைக் கோயிலுக்குள் அனுமதிக்க ஊழியா்கள் மறுத்துவிட்டனா்.

இதனால் ஊழியா்களிடம் பக்தா்கள் தகராறு செய்து, கோயில் முகப்பில் சில நிமிடங்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, இவா்கள் மீண்டும் கோயிலுக்குள் செல்ல முயன்ால், ராஜராஜன் வாயிலின் ஒரு கதவை ஊழியா்கள் மூடினா். பெரியவா்களுக்கு மட்டுமே அனுமதி எனக் கூறிய ஊழியா்களிடம் பக்தா்கள் மீண்டும் தகராறு செய்தனா்.

தகவலறிந்த காவல் துறையினா் தகராறு செய்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தினா். இதையடுத்து, பக்தா்கள் கோயிலுக்குள் செல்லாமல் திரும்பிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.