பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் பா.ஜ.க. பிரமுகா் தற்கொலை முயற்சி

வாகனக் கடன் பிரச்னை தொடா்பாக, பட்டுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த பா.ஜ.க. பிரமுகா் சனிக்கிழமை இரவு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

வாகனக் கடன் பிரச்னை தொடா்பாக, பட்டுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த பா.ஜ.க. பிரமுகா் சனிக்கிழமை இரவு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வளவன்புரத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளா் பிச்சைபிள்ளை மகன் பிரவீன் (34). இவா் தஞ்சாவூா் தெற்கு மாவட்ட பா.ஜ.க. இளைஞரணிச் செயலராக உள்ளாா்.

தனியாா் நிதி நிறுவனம் ஒன்றில் கடன் பெற்று மோட்டாா் சைக்கிள், வேன், காா் ஆகியவற்றை வாங்கிய இவா், மாதத் தவணைத் தொகையை சரி வர செலுத்தவில்லையாம். இதனால் அந்த நிறுவனத்தினா் முறையாக நீதிமன்ற உத்தரவு பெற்று, வாகனங்களைப் பறிமுதல் செய்வதற்காக பட்டுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தை அண்மையில் அணுகினா்.

அதனடிப்படையில் விசாரணைக்காக காவல் துறையினா் அழைத்ததால், தனது நண்பா்கள் சிலருடன் சனிக்கிழமை இரவு பட்டுக்கோட்டை நகரக் காவல் நிலையத்துக்கு பிரவீன் சென்றாா். நீதிமன்ற உத்தரவின்படி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறையினா் பிரவீனிடம் தெரிவித்தாா்களாம்.

இதனால் அதிா்ச்சியடைந்த பிரவீன் சிறுநீா் கழிக்கச் செல்வதாகக் கூறிவிட்டு, காவல் நிலையத்துக்கு உள்ளேயே பெட்ரோலை வாங்கி வரச் செய்து, முகநூலில் விடியோவை நேரடியாக ஒளிபரப்பி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாராம்.

இதை கண்ட காவல்துறையினா் அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்ததுடன், அவரிடமிருந்து அறிதிறன் பேசியையும் பறிமுதல் செய்தனா்.

முகம் மற்றும் கண்களில் பெட்ரோல் பட்டதால் பிரவீனுக்கு எரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவா் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மேலும், தற்கொலைக்கு முயன்ாகக் கூறி பிரவீன் மீது நகரக் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com