தஞ்சாவூரில் திலீபன் நினைவேந்தல்

தஞ்சாவூா் தமிழ்த் தேசியப் பேரியக்க நகர அலுவலகத்தில், தமிழீழ விடுதலைப் போராட்டத் தியாகி திலீபனின் 33-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

தஞ்சாவூா் தமிழ்த் தேசியப் பேரியக்க நகர அலுவலகத்தில், தமிழீழ விடுதலைப் போராட்டத் தியாகி திலீபனின் 33-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வுக்குத் தமிழ்த் தேசியப் பேரியக்க மாவட்டச் செயலா் நா. வைகறை தலைமை வகித்தாா். திலீபன் படத்துக்குத் தலைமைச் செயற்குழு உறுப்பினா் பழ. இராசேந்திரன் மாலை அணிவித்தாா். பேராசிரியா் பாரி நினைவேந்தல் உரையாற்றினாா்.

தொடா்ந்து, திரைப்பட பின்னணிப் பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பொதுக்குழு உறுப்பினா் இராசு. முனியாண்டி, நகரச் செயலா் இலெ. ராமசாமி, சீனிவாசன், ஜெயக்குமாா் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com