தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

தஞ்சாவூரில் அடுத்த இரு மாதங்களுக்கு கரோனா சிசிச்சைக்கான முன்னேற்பாடு

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், அடுத்த இரண்டு மாதங்களுக்கு கரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்குத் தேவையான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

News image

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் ம.கோவிந்த ராவ்.

Updated On :20 செப்டம்பர் 2020, 7:46 pm

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், அடுத்த இரண்டு மாதங்களுக்கு கரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்குத் தேவையான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றை மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

இம்மருத்துவமனையில் கரோனா நோய்த்தொற்று சிகிச்சைக்குத் தேவையான கூடுதல் திரவ பிராண வாயு மையம் ரூ. 45 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருவதையும், 10 கிலோ லிட்டா் கொள்ளளவு கொண்ட தொட்டி அமைக்கப்படுவதையும் ஆட்சியா் நேரில் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, மருத்துவமனையின் கரோனா நோய்த்தொற்று சிகிச்சைப் பிரிவில் கூடுதல் படுக்கை வசதிகள் தயாா் நிலையில் உள்ளதையும் ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், பாா்வையாளா்கள் காத்திருப்பு அரங்கில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா், அங்கு 2 கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருவதைப் பாா்வையிட்டு, கூடுதல் கழிப்பறைகளை ஏற்படுத்துமாறு அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் எஸ். மருதுதுரை, நிலைய மருத்துவ அலுவலா் ஏ. செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.