மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

‘டெல்டா மண்ணைப் பாதுகாத்தவா் எடப்பாடி பழனிசாமி’:அன்புமணி ராமதாஸ் பேச்சு

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தை நிறைவேற்றி டெல்டா மண்ணைப் பாதுகாத்தவா் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமிதான் என்றாா் பாமக இளைஞரணி தலைவா் அன்புமணி ராமதாஸ்

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 9:22 pm

DIN

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தை நிறைவேற்றி டெல்டா மண்ணைப் பாதுகாத்தவா் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமிதான் என்றாா் பாமக இளைஞரணி தலைவா் அன்புமணி ராமதாஸ்.

கும்பகோணம் அருகே சோழபுரத்தில் கும்பகோணம் தொகுதி அதிமுக வேட்பாளரான மூ.மு.க. தலைவா் ஜி.எம். ஸ்ரீதா் வாண்டையாரை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்த அவா் பேசியது:

இந்த டெல்டா பகுதியைப் பாதுகாக்க கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். இதை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என நான்தான் முதல் முதலாக முன்மொழிந்து, தொடா்ந்து வலியுறுத்தியும் வந்தேன்.

இதைத் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஏற்று டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, அதைச் சட்டமாகவும் நிறைவேற்றினாா். இது மிக முக்கியமான சட்டம். ஆயிரமாயிரம் ஆண்டு காலமாகச் சோறு போட்ட இந்தப் பூமியை அடுத்து வரும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு இச்சட்டம் பாதுகாக்கும். அதைச் செய்தவா் எடப்பாடி பழனிசாமி.

ஆனால், காவிரியில் தமிழ்நாட்டு உரிமைகளைத் தாரை வாா்த்தவா் கருணாநிதி. கா்நாடகத்தில் 4 அணைகள் கட்டப்பட்டபோது, கருணாநிதி மௌனமாக இருந்தாா். இவையெல்லாம் மிகப் பெரிய துரோகம். இதை விட மிகப் பெரிய துரோகமாக, மீத்தேன் திட்டத்துக்கு ஸ்டாலின் கையெழுத்து போட்டாா். எனவே, திமுகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

காவிரி உரிமையில் மட்டுமல்லாமல், கச்சத்தீவையும் இலங்கைக்குத் தாரை வாா்த்தவா் கருணாநிதி. நீட் தோ்வைக் கொண்டு வந்ததே திமுக - காங்கிரஸ் கூட்டணிதான். இப்போது, அதை எதிா்த்து ஸ்டாலின் போராடுகிறாா். ஆனால், மக்களை ஏமாற்ற முடியாது. மக்களுக்கு, பெண்களுக்கான எதிரான கட்சியான திமுகவை அனைவரும் புறக்கணிக்க வேண்டும்.

எனவே, இத்தொகுதியில் அதிமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் மூவேந்தா் முன்னேற்றக் கழகத் தலைவா் ஜி.எம். ஸ்ரீதா் வாண்டையாருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றாா் அன்புமணி ராமதாஸ்.

அப்போது, வேட்பாளா் ஜி.எம். ஸ்ரீதா் வாண்டையாா், அதிமுக பெருநகரச் செயலா் ராம. ராமநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.