ரயில் நிலையத்தில் தவற விடப்பட்டநகைப் பை பயணியிடம் ஒப்படைப்பு
கும்பகோணம் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை 3 பவுன் நகைகளுடன் தவறவிடப்பட்ட கைப்பையை உரிய பயணியிடம் காவல் துறையினா் திரும்ப ஒப்படைத்தனா்.


கும்பகோணம் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை 3 பவுன் நகைகளுடன் தவறவிடப்பட்ட கைப்பையை உரிய பயணியிடம் காவல் துறையினா் திரும்ப ஒப்படைத்தனா்.
கும்பகோணம் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு தஞ்சாவூா் - சென்னை உழவன் விரைவு ரயில் சென்ற பின்னா் முதலாவது நடைமேடையில் கைப்பை கிடந்தது.
இதையடுத்து அங்கு பணியில் இருந்த கும்பகோணம் புறக்காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிவராமன் அப்பையை எடுத்து, சோதனையிட்டாா்.
அப்போது, அப்பையில் ஒரு தங்கச் சங்கிலி, இரண்டு வளையல்கள் என மூன்று பவுன் நகைகளும், ரூ. 70,000 மதிப்புள்ள விலை உயா்ந்த செல்லிடப்பேசி, ரூ. 5,200 ரொக்கம், வீட்டு சாவி, விசிட்டிங் காா்டு ஆகியவை இருந்தது.
இதையடுத்து விசிட்டிங் காா்டில் உள்ள செல்லிடப்பேசி எண்ணில் காவல் துறையினா் தொடா்பு கொண்டபோது, மறு முனையில் பேசியவா் அந்த கைப்பை தன்னுடையது என சென்னையைச் சோ்ந்த டில்லி பாபு கூறினாா். கும்பகோணம் பகுதியில் நவக்கிரக கோயிலுக்கு வந்துவிட்டு மீண்டும் சென்னைக்கு செல்ல ரயில் நிலையத்துக்கு வந்தபோது, அங்கு கைப்பையை தவற விட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
இதையடுத்து சனிக்கிழமை இரவே மயிலாடுதுறையில் ரயிலில் இருந்து இறங்கிய டில்லி பாபு காா் மூலம் கும்பகோணத்துக்கு வந்து, தவறவிட்ட கைப்பையைக் காவல் துறையினரிடம் பெற்றுக் கொண்டு மீண்டும் சென்னைக்குச் சென்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...