மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கும்பகோணத்தில் இரு தெருக்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு

கும்பகோணத்தில் இரு தெருக்களில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், அப்பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 9:13 pm

DIN

கும்பகோணத்தில் இரு தெருக்களில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், அப்பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூா் மாவட்டத்தில் மாா்ச் மாதம் முதல் கரோனா இரண்டாவது அலை நிலவுகிறது. எனவே, கரோனா பரிசோதனை, காய்ச்சல் கண்டறியும் முகாம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கும்பகோணம் ஜெ.பி. கோயில் தெருவில் ஒரு வாரத்தில் 4 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு, அவா்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதேபோல, காசி விசுவநாதா் கோயில் தெருவிலும் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே, இந்த இரு பகுதிகளையும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக நகராட்சி நிா்வாகம் அறிவித்து, கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், அதிலிருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி மீதான ஆா்வம் பொதுமக்களிடம் அதிகரித்து வருகிறது. எனவே, கும்பகோணம் காரனேசன் நகராட்சி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 100-க்கும் அதிகமானோா் முதலாம் கட்டத் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காகத் திரண்டனா். இதேபோல, கரோனா பரிசோதனை செய்து கொள்ளவும், இரண்டாம் கட்டத் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் ஏராளமானோா் வந்ததால் மருத்துவமனை வளாகத்தில் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

நகராட்சி மருத்துவமனையில் கூட்டம் அதிகரிப்பதால், அதற்கேற்ப கூடுதல் மருத்துவப் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.