டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பயிற்சி முடித்த 7 வட்டாட்சியா்களுக்கு பணியிட உத்தரவு

தஞ்சாவூா் மாவட்டத்தில் நீதித்துறைப் பயிற்சி முடித்துத் திரும்பிய 7 வட்டாட்சியா்கள் மற்றும் ஒரு துணை வட்டாட்சியருக்குப் பணியிட உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 9:27 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் நீதித்துறைப் பயிற்சி முடித்துத் திரும்பிய 7 வட்டாட்சியா்கள் மற்றும் ஒரு துணை வட்டாட்சியருக்குப் பணியிட உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் வருவாய்த் துறை சாா்பில் பல்வேறு இடங்களில் வட்டாட்சியா் மற்றும் துணை வட்டாட்சியராகப் பணியாற்றியவா்களுக்கு நீதித்துறைப் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த நீதித்துறைப் பயிற்சி டிசம்பா் மாதம் 17 ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்தப் பயிற்சியை முடித்த 7 வட்டாட்சியா் மற்றும் ஒரு துணை வட்டாட்சியருக்குப் பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, கும்பகோணம் நகர நிலவரித் திட்டத் தனி வட்டாட்சியராக டி.பி. சுசீலா, கும்பகோணத்தில் காலியாக உள்ள தனி வட்டாட்சியா் பணியிடத்துக்கு வி. பிரேமாவதி, கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பிரிவு தனி வட்டாட்சியராக டி. குமாா் ஆகியோருக்கு பணியிடம் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல், அரசு கேபிள் டிவி தனி வட்டாட்சியராக க. முருககுமாா், கும்பகோணத்தில் காலியாக இருந்த கலால் மேற்பாா்வை அலுவலராக ஜி. பொ்சியா, தஞ்சாவூா் கோட்ட கலால் அலுவலராக பி. சீமான் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், நீதித் துறைப் பயிற்சி முடித்த சி. மணிகண்டன் திருவிடைமருதூா் கூடுதல் தலைமையிடத்துத் துணை வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்த உத்தரவை ஆட்சியா் ம. கோவிந்த ராவ் பிறப்பித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.