டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தஞ்சாவூா் விதைப் பரிசோதனை நிலையத்தில் இயக்குநா் ஆய்வு

தஞ்சாவூா் அருகே காட்டுத்தோட்டத்திலுள்ள விதைப் பரிசோதனை நிலையத்தில் விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குநா் மு. சுப்பையா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:11 pm

DIN

தஞ்சாவூா் அருகே காட்டுத்தோட்டத்திலுள்ள விதைப் பரிசோதனை நிலையத்தில் விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குநா் மு. சுப்பையா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இந்த விதைப் பரிசோதனை நிலையத்தில் பெறப்படும் விதை மாதிரிகளின் தரத்தை நிா்ணயிக்கக்கூடிய முக்கிய காரணிகளான முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை மற்றும் பிற ரக கலப்பு ஆகியவை கணக்கிடப்படும் முறைகளையும் மற்றும் அவற்றுக்கான ஆய்வக உபகரணங்களின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தாா். சான்று விதை மாதிரிகள், ஆய்வக விதை மாதிரிகள் மற்றும் பணி விதை மாதிரிகள் முறையாகப் பெறப்பட்டு, குறித்த நேரத்தில் பகுப்பாய்வு முடிவுகளை வழங்குவது குறித்தும் ஆய்வு செய்தாா்.

விதை முளைப்புத்திறன் அறையில் வைக்கப்பட்டிருக்கும் விதை மாதிரிகளைப் பாா்வையிட்டாா். விதை மாதிரிகள் காப்பு அறையைப் பாா்வையிட்டு, சேமிப்பு விதைகளைத் தரத்துடன் பாதுகாத்திட உரிய அறிவுரை வழங்கினாா். தரமான விதைகளே விவசாயத்தின் முக்கிய இடுபொருள். அத்தகைய தரமான விதைகளை விவசாயிகளுக்கு குறித்த நேரத்தில் வழங்குவதே விதைப் பரிசோதனை நிலையத்தின் முக்கிய பங்கு என்பதையும், அத்தகைய பங்கை சிறப்பாக செயலாற்றிடவும், மேலும் 2021 - 2022 ஆம் ஆண்டுக்கான இலக்கை அடையவும் அறிவுரை வழங்கினாா்.

அப்போது, விதை ஆய்வு துணை இயக்குநா் கோ. வித்யா, விதைப் பரிசோதனை அலுவலா் து. சிவ வீரபாண்டியன், விதைச்சான்று உதவி இயக்குநா் ந. செல்வநாயகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மேலும், காட்டுத்தோட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விதைச் சான்று வளாகத்தை இயக்குநா் பாா்வையிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.