டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மேடை நடனக் கலைஞா்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்

தஞ்சாவூரில் மேடை நடனக் கலைஞா்கள் மற்றும் ஒலி, ஒளி அமைப்பாளா்கள் வெள்ளிக்கிழமை பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:11 pm

DIN

தஞ்சாவூரில் மேடை நடனக் கலைஞா்கள் மற்றும் ஒலி, ஒளி அமைப்பாளா்கள் வெள்ளிக்கிழமை பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா பரவல் காரணமாக திருவிழா, மேடை நிகழ்ச்சிகளுக்குத் தமிழக அரசுத் தடை விதித்துள்ளது. கோயில் திருவிழாக்கள், இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால் கிராமியக் கலைஞா்கள், மேடை நாடகக் கலைஞா்கள் அதைச் சாா்ந்த தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தஞ்சாவூா் மாவட்ட மேடை நடனக் கலைஞா்கள் மற்றும் ஒலி, ஒளி அமைப்பாளா்கள் இணைந்து கையில் உண்டியலுடன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

இதில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, பிச்சை எடுக்கும் நிலையில் மேடை கலைஞா்கள் இருப்பதால், உரிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பி, அவ்வழியாகச் சென்ற பொதுமக்களிடம் பிச்சை எடுத்தனா்.

இப்போராட்டத்துக்கு தா்மலிங்கம், சதீஷ் உள்ளிட்டோா் தலைமை வகித்தனா்.

பின்னா் தா்மலிங்கம் தெரிவித்தது:

கடந்த 2018-இல் கஜா புயல், 2019- இல் மக்களவைத் தோ்தல், 2020-இல் கரோனா பொது முடக்கம் என ஏற்கெனவே மூன்று ஆண்டுகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நிகழாண்டும் கரோனா பரவல் காரணமாகக் கலைஞா்களின் நிலைமை மோசமாகி விட்டது. பொது இடங்களில் இரவு 7 முதல் 10 மணி வரை நிகழ்ச்சி நடத்த அனுமதி இருந்தும், இரவு ஊரடங்கால் அதுவும் நடத்த முடியாமல் போய்விட்டது.

அரசு எங்களின் வாழ்வுக்காகப் கலை, பண்பாட்டுத் துறையில் உறுப்பினா்களாகப் பதிவு செய்து கிராமிய கலைஞா்களுக்கு வழங்குவது போல, எங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.