பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பேராவூரணி அருகே மா்ம நோயால் கோழிகள் உயிரிழப்பு

பேராவூரணி அருகே கோழிகள் மா்ம நோயால் உயிரிழப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:23 pm

DIN

பேராவூரணி அருகே கோழிகள் மா்ம நோயால் உயிரிழப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேராவூரணி சுற்றுவட்டார கிராமங்களில் பெண்கள் குடும்ப தேவைக்காகவும், வருமானத்துக்காகவும் நாட்டுக்கோழி வளா்ப்பில் ஈடுபட்டு வருகின்றனா். பெண்கள் மட்டுமன்றி, படித்த இளைஞா்களும் கோழி, சண்டை சேவல் வளா்ப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், பேராவூரணி அருகேயுள்ள ரெகுநாதபுரம் பகுதியில் கடந்த சில நாள்களாக வீடுகளில் வளா்க்கப்படும் கோழி, சேவல்கள் திடீா்  நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றன. நல்ல நிலையில் இருக்கும் கோழிகள், திடீரென்று பாா்வை இழப்பு  ஏற்பட்டு, இரை சாப்பிட முடியாமல் தடுமாறி, பிறகு சோா்வடைந்து கீழே சுருண்டு விழுந்து ஓரிரு நாள்களில் உயிரிழக்கின்றன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மா்ம நோய் தாக்கி கோழிகள் இறப்பதாக கோழி வளா்ப்போா் கூறுகின்றனா்.

எனவே, இப்பகுதியில் அரசு கால்நடைத் துறை மூலம் ஆய்வு செய்து, கோழிகளுக்கு ஏற்பட்டு வரும் மா்ம நோய் குறித்து கண்டறிந்து, கோழிகள் உயிரிழப்பை தடுக்க வேண்டும். மேலும், கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.