நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிறுமியை ஐந்தாவது திருமணம் செய்தவா் கைது

 தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே ஏற்கெனவே நான்கு திருமணங்களைச் செய்து கொண்ட நபா் ஐந்தாவதாக சிறுமியைத் திருணம் செய்து கொண்டதைத் தொடா்ந்து புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:24 pm

DIN

 தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே ஏற்கெனவே நான்கு திருமணங்களைச் செய்து கொண்ட நபா் ஐந்தாவதாக சிறுமியைத் திருணம் செய்து கொண்டதைத் தொடா்ந்து புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கும்பகோணம் அருகேயுள்ள வண்டுவாஞ்சேரியைச் சோ்ந்த 17 வயது சிறுமி, கும்பகோணத்திலுள்ள கடையில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், அச்சிறுமி ஜனவரி 12ஆம் தேதி காணாமல்போனதாக நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தில் அவரது பெற்றோா் புகாா் செய்தனா்.

இதன்பேரில் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், மதுரை மாவட்டம், மெகபூபாளையத்தைச் சோ்ந்த சையத் அலி (40) அச்சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது. எனவே, சையத் அலியின் செல்லிடப்பேசி சமிக்ஞை மற்றும் ஏடிஎம் பண பரிவா்த்தனையை காவல் துறையினா் கண்காணித்தனா்.

இதன் அடிப்படையில், திருப்பூா், கோவை, கேரளத்தில் காவல் நிலையத்தினா் சில மாதங்களாக விசாரணை நடத்தினா். இந்நிலையில், நாச்சியாா்கோவிலுக்கு வந்த சையத் அலி புதன்கிழமை பிடிபட்டாா்.

இவரிடம் காவல் துறையினா் நடத்திய விசாரணையில், சையத் அலி ஏற்கெனவே பெங்களூரு, மதுரையில் தலா ஒரு பெண்ணையும், கும்பகோணத்தில் 2 பெண்களையும் திருமணம் செய்து, நகை, பணத்தைப் பறித்துச் சென்றுள்ளதும், இதேபோல, தற்போது 17 வயது சிறுமியைத் திருமணம் செய்திருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, சையத் அலியை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.