முதல்வருடனான கூட்டத்தில் ஒமைக்ரான் குறித்து விவாதிக்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

ஒமைக்ரான் தொடர்பாக வருகிற பொதுமுடக்கத் தளர்வு ஆலோசனைக் கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி (கோப்புப் படம்)
அன்பில் மகேஷ் பொய்யாமொழி (கோப்புப் படம்)

ஒமைக்ரான் தொடர்பாக வருகிற பொதுமுடக்கத் தளர்வு ஆலோசனைக் கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், ஒமைக்ரான் வரத் தொடங்கியுள்ள நிலையில் பள்ளிகளில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்: ஒமைக்ரான் தொடர்பாக பொது சுகாதாரத் துறையிலிருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வரவில்லை. பொதுவாக பொதுமுடக்கத் தளர்வை அமல்படுத்தும்போது மருத்துவ ஆலோசனைக் குழுவைத் தமிழக முதல்வர் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது வழக்கம். 

அடுத்து வருகிற பொதுமுடக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் ஒமைக்ரான் குறித்து விவாதிக்கப்படும். இதில், எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் செயல்படுத்தப்படும். இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2,621 மையங்கள் தேவைப்படுகின்றன. இதில், 1,821 மையங்கள் திறக்கப்பட்டு, செயல்படுகிறது. மாவட்டம் முழுவதும் விரைவில் அமைக்கப்பட்டுவிடும். இத்திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும். 12 மாவட்டங்களிலும் டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து மையங்களும் அமைக்கப்படும். 

மாநிலம் முழுவதும் ஜனவரி மாதத்திலிருந்து முழுமையாகச் செயல்படுத்தப்படும் என்றார். அப்போது, தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com