புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க வேண்டும்: பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க வேண்டும் என்றாா் முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 7:21 pm

DIN

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க வேண்டும் என்றாா் முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன்.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை தெரிவித்தது:

திமுக அரசு நூறு நாள்களில் 200 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம் என விளம்பரம் செய்துள்ளது. ஆனால் எதுவும் செய்யவில்லை. தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாகியுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவா்கள் போதைக்கு அடிமையாகக்கூடிய சூழல் உள்ளது. எனவே, உடனடியாக போதைப் பொருள் விற்பனையைத் தடை செய்து தொடா்புடையவா்களைக் கைது செய்ய வேண்டும். இதேபோல லாட்டரி விற்பனையையும் தடுக்க வேண்டும்.

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் வீட்டில் இதுவரை ஊழல் தடுப்புப் பிரிவினா் நடத்திய சோதனை மூலம் எத்தனை போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்ன வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது? என்பது தெரியவில்லை. இதன் மூலம், ஏதோ ஒரு காலத்தில் பயன்படுத்துவதற்காக வழக்குகளைப் பதிவு செய்து சோ்த்து வருகின்றனா் என்பது தெரிகிறது. அது, தோ்தல் காலமாகவோ அல்லது தேவைப்படும்போதோ இருக்கலாம்.

தவறு செய்திருந்தால் யாராக இருந்தாலும், முழுமையாக விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்.

ஒரு வழக்குப் பதிவு செய்யப்படும்போது, குற்றம்சாட்டப்படுபவா்கள் மீது உடனடியாக யோசித்து நடவடிக்கை எடுப்பது காவல் துறையினரின் கடமை. இல்லாவிட்டால் நடவடிக்கையை விட்டுவிட வேண்டும். இதைச் செய்யாமல் வாட்டுகிற விதமாக மாரிதாசை பழிவாங்கும் வகையில் செயல்படுகிற அரசு மக்களுக்கானதாகவோ, கருத்து சுதந்திரத்துக்கானதாகவோ இருக்க முடியாது என்றாா் பொன். ராதாகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.