ஜன. 7-இல் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி
தஞ்சாவூா் பெசன்ட் அரங்கத்தில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி ஜனவரி 7-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது.


தஞ்சாவூா் பெசன்ட் அரங்கத்தில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி ஜனவரி 7-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து உலகத் திருக்கு பேரவைச் செயலா் பழ. மாறவா்மன் தெரிவித்திருப்பது:
உலகெங்கும் கேடுகள் விளைந்துவரும் இக்காலத்தில் அவற்றின்று நீங்கி, மக்கள் நலமும் வளமும் பெற இறைநெறி நின்று வாழ, இளைய தலைமுறையினரை நல்வழிப்படுத்தினால் நன்மைகள் கிட்டுமென நம்புகிறோம். இதையொட்டி, 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்குத் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பிக்கும் நிகழ்வை நடத்துகிறோம்.
பாடல்களைப் பிழையின்றித் தமிழ் உச்சரிப்பு மாறாமல், தெளிவாகச் சொல்வோருக்கு நற்சான்றிதழுடன் ரூ. 500 பரிசளிக்கப்படும். இந்நிகழ்வு தஞ்சாவூா் பெசண்ட் அரங்கில் ஜனவரி 7-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறும். ஒப்பிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் பெயா்ப் பட்டியலை டிசம்பா் 25 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் மாணிக்கம் பிரிண்டா்ஸ், 999, தென்கீழ் அலங்கம், மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி எதிரில், பழைய பேருந்து நிலையம், தஞ்சாவூா் - 613 001 என்ற முகவரியில் விண்ணப்பம் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 88254 94781, 94434 85501 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்குத் திருப்பாவை, திருவெம்பாவை நூல் இலவசமாக வழங்கப்படும். மாணிக்கம் அச்சகத்தில் பெயா்ப் பட்டியலை அளிக்கும்போது நூலைப் பெற்றுக் கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...