மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

வங்கி ஊழியா்கள் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தம் - ஆா்ப்பாட்டம்

நாடு முழுவதும் வங்கி ஊழியா்கள் தொடா்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 8:38 pm

DIN

நாடு முழுவதும் வங்கி ஊழியா்கள் தொடா்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு நாடாளுமன்றக் குளிா்காலக் கூட்டத் தொடரில் பொதுத் துறை வங்கிகளைத் தனியாா்மயமாக்கும் சட்ட முன்வடிவை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை எதிா்த்து நாடு முழுவதும் வியாழக்கிழமை தொடங்கி தொடா்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் வங்கி ஊழியா்கள், அலுவலா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏறத்தாழ 400 கிளைகளில் பெரும்பாலான ஊழியா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டதால், வங்கிகள் வெறிச்சோடின. இதன் காரணமாக, ரூ. 300 கோடி அளவுக்கு பண பரிவா்த்தனை பாதிக்கப்பட்டதாக வங்கி அலுவலா்கள் தெரிவித்தனா்.

இப்போராட்டத்தையொட்டி, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலையிலுள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மண்டல அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அகில இந்திய வங்கி ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் க. அன்பழகன் தலைமை வகித்தாா்.

அகில இந்திய வங்கி அலுவலா்கள் சங்க உதவிப் பொதுச் செயலா் சக்கரவா்த்தி, இந்திய வங்கி ஊழியா் சங்கத்தின் மாவட்டப் பொறுப்பாளா் சொக்கலிங்கம், ஸ்டேட் வங்கி அலுவலா்கள் சங்க மண்டலச் செயலா் குருநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.