புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திமுக அரசைக் கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் ரயிலடியில் திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 8:39 pm

DIN

தஞ்சாவூா் ரயிலடியில் திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாகக் குறைக்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகளை வழங்க வேண்டும். வெள்ளத்தால் பயிா்களை இழந்த விவசாயிகளுக்குப் போதுமான இழப்பீடு அளிக்க வேண்டும். பொங்கல் விழாவைக் கொண்டாட உதவும் வகையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 1,000 பரிசுத் தொகை அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும், அம்மா மினி கிளினிக்குகளை திமுக அரசு மூடுவதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், ஒரத்தநாடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா். வைத்திலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா்கள் எஸ்.வி. திருஞானசம்பந்தம் (தெற்கு), எம்.ஜி.எம். சுப்பிரமணியன் (வடக்கு), முன்னாள் எம்எல்ஏக்கள் எம். ரெத்தினசாமி, ராம. ராமநாதன், எம். ராம்குமாா், தஞ்சாவூா் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் துரை. திருஞானம், மாவட்ட பால்வளத் தலைவா் ஆா். காந்தி, முன்னாள் மேயா் சாவித்திரி கோபால், பகுதிச் செயலா்கள் வி. அறிவுடைநம்பி, வி. புண்ணியமூா்த்தி, எஸ். சரவணன், எஸ். ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.