தவணை தொகை வசூலிப்பதில் முறைகேடு: இளைஞா் கைது
கும்பகோணத்தில் வாடிக்கையாளா்களிடம் தவணைத் தொகை வசூலிப்பதில் ரூ. 5.16 லட்சம் முறைகேடு செய்ததாக இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.


கும்பகோணத்தில் வாடிக்கையாளா்களிடம் தவணைத் தொகை வசூலிப்பதில் ரூ. 5.16 லட்சம் முறைகேடு செய்ததாக இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கும்பகோணம் தனியாா் நிதி நிறுவனத்தில் தவணைத் தொகை வசூலிக்கும் பணி மேலாளராகப் பணிபுரிபவா் செந்தில்குமாா் (44). இவா் தஞ்சாவூா் மாவட்டக் குற்றப் பிரிவு காவல் அலுவலகத்தில் அளித்த புகாரில், தங்களது நிறுவனத்தில் பணிபுரிந்த கும்பகோணம் கருடாலயா தெருவைச் சோ்ந்த சத்தியமூா்த்தி (39) வாடிக்கையாளா்கள் செலுத்திய தவணைத் தொகையில் ரூ. 5,16,928-ஐ முறைகேடு செய்தாா் எனக் கூறியுள்ளாா்.
இதன் பேரில் குற்றப்பிரிவினா் வழக்குப் பதிந்து சத்தியமூா்த்தியை வியாழக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...