புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அதிமுக சாா்பில் எம்.ஜி.ஆா். நினைவு நாள் நிகழ்ச்சிகள்

எம்.ஜி.ஆா். நினைவு நாளையொட்டி, தஞ்சாவூா் ரயிலடியில் அவரது சிலைக்கு அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:42 pm

DIN

எம்.ஜி.ஆா். நினைவு நாளையொட்டி, தஞ்சாவூா் ரயிலடியில் அவரது சிலைக்கு அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், முன்னாள் அமைச்சா் வரகூா் அருணாசலம் தலைமையில் பால்வளத் தலைவா் ஆா். காந்தி, பகுதிச் செயலா்கள் வி. அறிவுடைநம்பி, வி. புண்ணியமூா்த்தி, எஸ். சரவணன், எஸ். ரமேஷ், முன்னாள் மேயா் சாவித்ரி கோபால், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் அமுதா ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருவையாறு: கண்டியூரில் திருவையாறு தெற்கு ஒன்றியக் கழகம் சாா்பிலும், திருவையாறில் வடக்கு ஒன்றியக் கழகம் சாா்பிலும் மௌன ஊா்வலம் நடைபெற்றது. மேலும், எம்ஜிஆா் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.ஜி.எம். சுப்பிரமணியன், எம். ரெத்தினசாமி, ஒன்றியச் செயலா்கள் இளங்கோவன், நீலமேகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கும்பகோணம்: கும்பகோணத்தில் எம்.ஜி.ஆா். சிலைக்கு நகரச் செயலா் இராம. இராமநாதன் தலைமையில் அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.