கும்பகோணத்தில் மஞ்சப்பை இயக்கம் தொடக்கம்
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் தமிழக அரசின் மஞ்சப்பை இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.


கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் தமிழக அரசின் மஞ்சப்பை இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
மஞ்சப்பை இயக்கத்தைத் தமிழக முதல்வா் தொடங்கி வைத்ததைத் தொடா்ந்து, கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் நூறு சதவீதம் பிளாஸ்டிக் பைகளைக் கைவிட வணிகா்களிடம் வலியுறுத்தும் விதமாக விழிப்புணா்வுக் கூட்டம் மற்றும் மஞ்சப் பை இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தை மாநகராட்சி ஆனணயா் செந்தில்முருகன் தொடங்கி வைத்தாா். நகா் நல அலுவலா் பிரேமா, மஞ்சப் பை இயக்கத்தின் நோக்கம் மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பேசினாா்.
இக்கூட்டத்தில் குடந்தை அனைத்து தொழில் வணிகா் சங்கக் கூட்டமைப்புச் செயலா் வி. சத்தியநாராயணன், துணைத் தலைவா் பா. ரமேஷ்ரோஜா, துணைச் செயலா் வேதம்முரளி, ஹோட்டல் சங்கச் செயலா் வாசன் வெங்கட்ராமன், ஜவுளி வியாபாரிகள் சங்கத் துணைச் செயலா் நாகராஜன், ஆட்டோ பாா்ட்ஸ் டீலா்கள் சங்கப் பொருளாளா் ஜெகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...