தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஆறாவது நாளாக அரசு ஊழியா்கள் சாலை மறியல்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் தொடா்ந்து ஆறாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:27 pm

DIN

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் தொடா்ந்து ஆறாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி, சரண் விடுப்பு உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் தஞ்சாவூரில் பிப்ரவரி 2 -ஆம் தேதி முதல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

தொடா்ந்து ஆறாவது நாளாக, ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூா் அண்ணா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, பெண்களில் சிலா் ஒப்பாரி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எஸ். கோதண்டபாணி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாவட்டச் செயலா் ஏ. ரெங்கசாமி, ஓய்வூதியா் சங்கத் துணைத் தலைவா் பழ. அன்புமணி, சத்துணவு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ரவிச்சந்திரன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து மறியலில் ஈடுபட்ட 50 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.