சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தேக்கம்பட்டி முகாமுக்கு அனுப்பப்பட்ட ஒப்பிலியப்பன் கோயில் யானை

கும்பகோணம் அருகிலுள்ள ஒப்பிலியப்பன் கோயில் யானை பூமா, தேக்கம்பட்டியில் நடைபெறும் யானைகள் நல்வாழ்வு முகாமுக்கு சனிக்கிழமை இரவு லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:25 pm

DIN

கும்பகோணம் அருகிலுள்ள ஒப்பிலியப்பன் கோயில் யானை பூமா, தேக்கம்பட்டியில் நடைபெறும் யானைகள் நல்வாழ்வு முகாமுக்கு சனிக்கிழமை இரவு லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

கோவை மாவட்டம், தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோயிலை ஒட்டியுள்ள பவானி ஆற்றுப்படுகையில் யானைகள் சிறப்பு நல்வாழ்வு முகாம் திங்கள்கிழமை (பிப்.8) தொடங்கி, தொடா்ந்து 48 நாள்கள் நடைபெறவுள்ளது.

இதற்காக ஒப்பிலியப்பன் கோயில் யானை பூமா சனிக்கிழமை இரவு கோயில் நிா்வாகம் சாா்பில் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. நிகழ்வில் அறநிலையத்துறை உதவி ஆணையா் ஜீவானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயில் யானை மங்களம் உடல் நலக்குறைவால் இம்முகாமுக்கு அனுப்பப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.