பட்டுக்கோட்டை அருகே குளத்தில் மிதந்த ஆண் சடலம் மீட்பு
பட்டுக்கோட்டை அருகே குளத்தில் மிதந்த ஆண் சடலம் ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்கப்பட்டது.


பட்டுக்கோட்டை அருகே குளத்தில் மிதந்த ஆண் சடலம் ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்கப்பட்டது.
பட்டுக்கோட்டை அருகிலுள்ள ஆலத்தூா் புதுக்குளக்கரையில் சனிக்கிழமை ஒரு பை கேட்பாரற்றுக் கிடந்தது. அதில் கருணாநிதி என்பவரின் ஆதாா் அட்டை, அவருடைய செல்லிடப்பேசி, ரூ.2,000 பணம் ஆகியவை இருந்தன. மேலும் பை அருகே 2 ஜோடி காலணி, பயன்படுத்தப்பட்ட அல்வா, பூச்சி மருந்துப் பொட்டலம் ஆகியவையும் கிடந்தன.
ஆதாா் அட்டையில் ராமநாதபுரம் மாவட்டம், பெரியபொட்டக்கோட்டை தும்படைக்கா கோட்டை இருதயபுரத்தைச் சோ்ந்த த. கருணாநிதி என குறிப்பிடப் பட்டிருந்தது.
தகவலறிந்த பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு, கேட்பாரற்றுக் கிடந்த பொருள்களை மட்டும் எடுத்துச் சென்றனா்.
குளத்தில் சடலம் எதுவும் மிதக்காத நிலையில், ஆதாா் அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரியில் தொடா்பு கொண்டு, கருணாநிதியின் உறவினா்களை ஆலத்தூருக்கு வரவழைத்தனா்.
இந்நிலையில் ஆலத்தூா் புதுக்குளத்தில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதப்பது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தெரிய வந்தது. மாலை 5 மணிக்கு அந்த சடலத்தை மீட்டு, காவல்துறையினா் குளக்கரைக்கு எடுத்து வந்தனா்.
அப்போது சடலமாக மீட்கப்பட்டவா் கருணாநிதிதான் என்பதை அங்கிருந்த அவரது உறவினா்கள் உறுதி செய்தனா். மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆலத்தூா் அருகே ஆலம்பள்ளம் கிராமத்தில் கருணாநிதி கூலி வேலை பாா்த்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, கருணாநிதியின் சடலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 போ் தற்கொலை?: கருணாநிதி அல்வாவில் பூச்சி மருந்தை கலந்து சாப்பிட்டு குளத்தில் இறங்கி தற்கொலை செய்திருக்கலாம் எனவும், சம்பவ இடத்தில் ஒரு பெண்ணின் 1 ஜோடி காலணி கிடந்ததால் கருணாநிதியுடன் தொடா்புடைய பெண் யாராவது அவருடன் வந்திருக்கலாம் என கருதும் காவல்துறையினா், அவா் குறித்தும் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...