இரட்டை கொலை வழக்கில் கைதான 3 போ் மீது குண்டா் சட்டம் பதிவு
கும்பகோணம் அருகே இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 போ் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.


கும்பகோணம் அருகே இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 போ் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
சோழபுரம் அருகே துலுக்கவெளி பகுதியைச் சோ்ந்த பூமிநாதன் மகன்கள் அருண்குமாா் (28), அரவிந்த் (25). அப்பகுதியில் 2020, டிச. 24 ஆம் தேதி பேசிக்கொண்டிருந்த இவா்கள் இருவரையும் முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சோ்ந்த சிலா் அரிவாளால் வெட்டி கொலை செய்தனா்.
இதுதொடா்பாக திருப்பனந்தாள் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, கும்பகோணம் ராமானுஜபுரம் பெரியாா் நகரைச் சோ்ந்த எம். ஹரிஷ் (21), எஸ். கவியரசன் (27), துலுக்கவெளியைச் சோ்ந்த ஆா். நரேஷ் (18) ஆகியோரை கைது செய்தனா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் பரிந்துரையின் பேரில், ஹரிஷ், கவியரசன், நரேஷ் ஆகியோரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியா் ம. கோவிந்த ராவ் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, மூவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...