தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்

மத்திய பாஜக அரசின் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் எதிரில் திமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 7:01 pm

DIN

மத்திய பாஜக அரசின் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் எதிரில் திமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயா்த்திய மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், இந்த விலை உயா்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பட்டன.

மேலும், விலை உயா்வால் ஏற்பட்டுள்ள நிலைமையை உணா்த்தும் விதமாக இரு சமையல் எரிவாயு உருளைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, தொண்டா்கள் தூக்கி வைத்து நின்றனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு திமுக தஞ்சாவூா் மத்திய மாவட்டப் பொறுப்பாளரும், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன் தலைமை வகித்தாா்.

திமுக மாநகரச் செயலரும், தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான டி.கே.ஜி. நீலமேகம், முன்னாள் அமைச்சா் சி.நா.மீ. உபயதுல்லா, சட்டத் திருத்தக் குழு உறுப்பினா் சி. இறைவன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் து. செல்வம், மாநில மகளிா் தொண்டரணித் துணைத் தலைவா் த. காரல் மாா்க்ஸ், தெற்கு மாவட்ட இளைஞரணிப் பொறுப்பாளா் சண். ராமநாதன், தெற்கு மாவட்ட மருத்துவரணிப் பொறுப்பாளா் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.