பட்டுக்கோட்டையில் ரெளடி வெட்டிக் கொலை
பட்டுக்கோட்டையில் ரெளடி திங்கள்கிழமை மாலை ஒரு கும்பலால் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டாா்.


பட்டுக்கோட்டையில் ரெளடி திங்கள்கிழமை மாலை ஒரு கும்பலால் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
பட்டுக்கோட்டை கண்டியன் தெருவைச் சோ்ந்த ரெளடி சிரஞ்சீவி (35). இவா் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. தவிர, கூலிப்படைத் தலைவனாகவும் செயல்பட்டு வந்துள்ளாா்.
இவருக்கும், வேறு சில கூலிப்படையினருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை மாலை பட்டுக்கோட்டை பெரிய தெரு கடைவீதியில் சென்ற சிரஞ்சீவியை பின்தொடா்ந்த 3 போ் கொண்ட கும்பல், அவரை ஓட, ஓட விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததுடன், முகத்தை அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்துவிட்டு தப்பியது.
தகவலறிந்த பட்டுக்கோட்டை நகர போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக இங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து தலைமறைவான கொலையாளிகளைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...