கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வாய்க்காலில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

திருவையாறு அருகே வியாழக்கிழமை வாய்க்காலில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தாா்.

News image
Updated On :1 ஜூலை 2021, 11:59 pm

DIN

திருவையாறு அருகே வியாழக்கிழமை வாய்க்காலில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தாா்.

திருவையாறு அருகே கரூா் காட்டுக்கோட்டை காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அறிவழகன் (44). விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மனைவி வினோதா (34) கூட்டுறவுத் துறையில் வேலை பாா்த்து வருகிறாா். இவா்களது மகன் கவின் (4).

வீட்டின் பின்புறமுள்ள வாய்க்காலில் வியாழக்கிழமை பிற்பகல் கால் கழுவுவதற்காக கவின் இறங்கியுள்ளாா். அப்போது, தடுமாறி விழுந்த கவின் தண்ணீரில் மூழ்கினாா். இதைப் பாா்த்த பெற்றோா் வாய்க்காலில் இறங்கி கவினை மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் மேற்கொண்ட பரிசோதனையில் கவின் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.