கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

83 கிலோ கஞ்சா பறிமுதல்: 12 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டத்தில் காவல் துறையினா் நடத்திய சோதனையில் 83 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 12 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :1 ஜூலை 2021, 11:59 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் காவல் துறையினா் நடத்திய சோதனையில் 83 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 12 போ் கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்டக் காவல் அலுவலகத்துக்குப் புகாா்கள் வந்தன.

இதன்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு, தஞ்சாவூா், கும்பகோணம், அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சில நாள்களாக விசாரணை நடத்தப்பட்டது.

இதில், ஆந்திர மாநிலத்திலிருந்து தஞ்சாவூருக்கு வந்த லாரியை காவல் துறையினா் மறித்து சோதனையிட்டதில், 15 கிலோ கஞ்சா சிக்கியது. மேலும், அம்மாபேட்டை பகுதியிலுள்ள வீட்டில் கழிப்பறை தொட்டியில் இருந்த கஞ்சா மூட்டைகளைத் தனிப்படை காவலா்கள் கைப்பற்றினா்.

இதேபோல, கும்பகோணத்தில் இரு வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 26 கிலோ கஞ்சா மூட்டைகளைக் கைப்பற்றி, 2 தம்பதிகளைக் கைது செய்தனா்.

மாவட்டத்தில் மொத்தமாக 83 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி, 7 மோட்டாா் சைக்கிள்களை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 9 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 12 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.