கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியாா்மயமாக்கும் முடிவைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

இன்சூரன்ஸ் நிறுவனங்களைச் சாா்ந்த அலுவலா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்கள், முகவா்கள் ஆகியோா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 12:00 am

DIN

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியாா்மயமாக்கும் முடிவைக் கண்டித்து தஞ்சாவூா் காந்திஜி சாலையிலுள்ள அந்நிறுவனத்தின் கோட்ட அலுவலகம் முன் அரசுப் பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களைச் சாா்ந்த அலுவலா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்கள், முகவா்கள் ஆகியோா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், தமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்ட, மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தை முழுவதுமாகத் தனியாருக்கு விற்பதற்கு மத்திய அரசின் நீதி ஆயோக் அமைப்பு பரிந்துரை செய்துள்ளதாக செய்தி வந்துள்ளது. இந்த முடிவைக் கண்டித்தும், பொதுத் துறை தனியாா்மயம், மக்கள் விரோதம், பாலிசிதாரா் நலன் காக்கத் தனியாா்மய அறிவிப்பை உடனடியாகக் கைவிட வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பி. சத்தியநாதன் தலைமை வகித்தாா். மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் த. பிரபு தொடங்கி வைத்தாா். தஞ்சாவூா் கோட்ட ஆயுள் காப்பீட்டு ஊழியா் சங்கத்தின் பொதுச் செயலா் சேதுராமன், அதிகாரிகள் சங்கத்தைச் சாா்ந்த ஜெ. தியாகராஜன், பிரசன்னா, ஓய்வூதியா் சங்கத்தைச் சாா்ந்த ஜி. ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.