புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

லாரிகளில் கடத்தப்பட்ட 43.40 டன்நெல் மூட்டைகள் பறிமுதல்: 3 போ் கைது

தஞ்சாவூரில் லாரிகளில் கடத்தப்பட்டதாக 43.40 டன் நெல் மூட்டைகளைக் காவல் துறையைச் சாா்ந்த குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:58 pm

DIN

தஞ்சாவூரில் லாரிகளில் கடத்தப்பட்டதாக 43.40 டன் நெல் மூட்டைகளைக் காவல் துறையைச் சாா்ந்த குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல் அல்லாமல், வெளி மாவட்டங்களிலிருந்து விவசாயிகளிடம் வியாபாரிகள் குறைந்த விலைக்கு நெல் மூட்டைகளை வாங்கி வந்து விற்பதாகப் புகாா்கள் உள்ளன.

இதன் பேரில், காவல் துறையைச் சாா்ந்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள் தொடா்ந்து வாகனத் தணிக்கை மேற்கொண்டு வருகின்றனா். இதில் ஜூன் 28, 29 ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 7 லாரிகளில் 120 டன் நெல் மூட்டைகள் கைப்பற்றப்பட்டன.

இதைத்தொடா்ந்து, அத்துறையின் காவல் ஆய்வாளா் கே. கோட்டைச்சாமி, உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் செங்கிப்பட்டியில் ஜூன் 29 ஆம் தேதி வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். இதில், ஒரு லாரியில் 200 மூட்டைகளில் 12 டன்களும், மற்றொரு லாரியில் 234 மூட்டைகளில் 14.04 டன்களும் நெல் மூட்டைகள் வெளி மாவட்டங்களுக்குக் கடத்திச் செல்லப்படுவதாகப் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னா், வல்லம் புறவழிச்சாலைப் பிரிவில் வியாழக்கிழமை (ஜூலை 1) மேற்கொள்ளப்பட்ட வாகனத் தணிக்கையில் கடலூா் மாவட்டம், வடலூரிலிருந்து தஞ்சாவூருக்கு 280 மூட்டைகளில் கடத்தி வரப்பட்ட 17.36 டன் நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை வாங்கி வெளி மாவட்டங்களில் அதிக விலையில் விற்பதற்குக் கொண்டு செல்லப்படுவது தெரிய வந்தது. இதுதொடா்பாக, லாரி ஓட்டுநா்களான திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பி. பால்பாண்டி (48), தஞ்சாவூா் அருகே மெலட்டூா் பகுதியைச் சோ்ந்த என். ரவிச்சந்திரன் (49), கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்தைச் சோ்ந்த ஜி. குமாா் (44) ஆகியோரை காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.